திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே மணலியில் உள்ள எண்ணெய் தொழிற்சாலை குடோனில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் பரந்ததால் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தின் போது குடோனில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும், குடோனில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைக்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.