திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள விநாயகா மெட்டல் ஒர்க் தொழிற்சாலையில் அலுமினியம் உருக்கும் பணியின் போது, இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் இந்திரகுமார் ஆகிய இருவர் மீது சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் 80% தீக்காயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.