திருவள்ளூரில் இன்று மின்குறைதீர் கூட்டம்

திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று காலை 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. திருவள்ளூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் – பொறுப்பு, பாலமுருகன் தலைமை தாங்கி, மின் நுகர்வோரிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் மின் துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி