கோவில் நிர்வாகம் சார்பில் மலை அடிவாரத்தில் உள்ள தணிகை குடியிலிருந்து பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவிலுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி மேலும் பக்தர்கள் வசதிக்காக முருகன் கோவிலுக்கு புதிய பேருந்து நன்கொடையாக வழங்கினார்.
இப்பேருந்தை கோவில் மாட வீதியில் பேருந்துக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து பின்னர் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் பேருந்தின் சாவியை தொழிலதிபர் ராமமூர்த்தி வழங்கினார். பின்னர் மலை கோவிலில் இருந்து மலை அடிவாரத்தில் உள்ள தணிகை குடியில் வரை பக்தர்களை ஏற்றிச்செல்ல பேருந்து சேவை இயக்கப்பட்டது.