மேலும் ஆட்சியர் வளாகத்தில் பயன்பாட்டற்று பழுதடைந்து கிடந்த வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களின் சிறுகடைகள் மற்றும் மின் வயர்கள் ஆபத்தான நிலையில் இருந்தது. இதனை அடுத்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உடனடியாக பாழடைந்து கிடக்கும் கழிப்பறைகளையும் பயன்பாடற்று கிடைக்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடைகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவறைகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றினர். மேலும் பயன்பாடு இல்லாமல் பழுதடைந்து கிடைக்கும் வாகனங்களையும் அகற்றும் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது