திருவள்ளூர்: காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், பொன்னேரி எம்.எல்.ஏ வுமான துரைசந்திரசேகர் தலைமை தாங்கினார். 

திருவள்ளூர் நகரதலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த், மாநில பொதுச் செயலாளர் அஸ்வின்குமார் தளபதி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இஸ்லாமிய பெருமக்களுக்கு எதிரான வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து கையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ துரைசந்திரசேகர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வேண்டுமென்றே தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாக நிதி வழங்காமல் 100 நாள் வேலைகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நிதி ஒதுக்காமல் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை கொடுப்போம் என்று அதிகாரதுஷ்பிரயோகம் செய்கின்றார். 

இந்தியாவில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கொண்டுவந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி