திருவள்ளூர்: டவர் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு; பரபரப்பு வீடியோ

திருவள்ளூரை அடுத்த அரண்வாயில் திரு வி க தெருப் பகுதியில் குட்டை அரசுப் புறம்போக்கு இடத்தை அரண்வாயல் பகுதியில் 20 ஆண்டுகளாக பஞ்சாயத்து செயலராகப் பணிபுரிந்த ஜெயசங்கர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்த நிலையில், அருகில் இருந்த அவரின் இடத்திற்குப் பட்டா பெற்றுக்கொண்டு, குட்டை புறம்போக்கு இடத்திற்கு அரசிடம் பட்டா பெற்றுவிட்டதாக, இதனால் இது எனக்குச் சொந்தமான இடம் என கிராமத்தில் கூறி, அந்த இடத்தை ஊராட்சி செயலர் சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். 

இந்நிலையில் குட்டை புறம்போக்கு இடத்திற்குப் பட்டா உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்திடம் தவறுதலாகப் பட்டாவைக் கொடுத்து, அந்த இடத்தில் ஏர்டெல் டவர் அமைப்பதற்குப் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியுள்ளார். இதனால் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையே ஏர்டெல் நிறுவனத்தினர் குட்டை புறம்போக்கு இடத்தில் டவர் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், இதனை உடனடியாகத் தடுக்க வேண்டும் எனவும் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆவடி மாநகர துணை ஆணையர் ரவிக்குமார் மற்றும் செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குட்டை புறம்போக்கு இடத்தில் ஏர்டெல் நிறுவனம் தவறாக அமைக்கும் பணியினைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்த பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று தடை பெற்று வரும் வரை டவர் அமைக்கும் பணியினை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி