சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பட்டரை பெரும்புதூர் சுங்கச்சாவடியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் கார், மினி வேன் தவிர்த்து பேருந்துகள், கனரக வாகனங்களுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள், லாரிகள், பேருந்துகளுக்கு ₹10 கட்டணம் உயர்ந்துள்ளது. பேருந்துக்கு ஏற்கனவே ₹135 இருந்தது, கட்டணம் ₹140 உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று கனரக வாகனங்கள் ₹210 இருந்து ₹220 உயர்ந்துள்ளது. அதிக பாரங்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு ₹260 இருந்து ₹265 உயர்ந்திருப்பதால், ஏற்கனவே பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டு பொருட்களும் உயர்ந்திருக்கும் நிலையில் மேலும் சுங்க கட்டணம் உயர்த்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத சூழ்நிலை உருவாகும். கட்டணத்தை குறைத்திட வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பேருந்துகள் ஏற்கனவே வங்கியில் கடன் பெற்று இயக்கி வரும் நிலையில் சுங்க கட்டணம் உயர்வால் மிகச் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதால் ஒன்றிய அரசு கட்டணத்தை குறைக்க வேண்டும் என தனியார் பேருந்து வாகன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி