இதில் பேசிய பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ லியோனி திருவள்ளுவர் இசையால் திருக்குறளை சொல்லவில்லை என்றும் நடித்து பேசி சொல்லவில்லை என்றும் எழுத்தால் எழுதியதால் தான் இன்றும் திருக்குறள் நம்மோடு வாழ்கிறது என்று தீர்ப்பு வழங்கினார். இந்திய மொழிகளுக்கு இல்லாத பெருமை எழுத்து வடிவில் வந்த முதல் மொழி தமிழ் மொழி தான் என்றதுடன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பானைகளில் எழுத்துருக்களை கண்டறிந்துள்ளனர். தமிழ் சமூகம் என்றும் எழுதப் படிக்கத் தெரிந்த சமூகமாக இருந்திருக்கிறது என பெருமையுடன் தெரிவித்தார். புத்தகம் வாழ்நாள் முழுவதும் நிரந்தரமாக நம்மோடு இருக்கும் என தெரிவித்ததுடன் இந்தியாவிலேயே தனக்கு வழங்கும் சால்வை மாலைகளுக்கு பதிலாக புத்தகத்தை பரிசளியுங்கள் என்று கேட்ட ஒரே முதல்வர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என்றும், தமிழக முதலமைச்சர் மு க. ஸ்டாலின் 20 ஆண்டுகளில் 11 லட்சம் புத்தகங்களை பரிசாக பெற்று அதை 5 நூலகங்களாக அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.
Motivational Quotes Tamil