தொடக்கத்தில் இரண்டு மாதம் அரசுத் திட்டம் செயல்பட்டு வந்த நிலையில் திட்டம் செயல்படுத்த போதிய நிதி இல்லாமலும் செங்கல் அறுக்க மண் மற்றும் மணல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது. திட்டத்திற்கு நிதி கிடைக்காமல் அதிகாரிகள் திட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டனர். இதனால் அத்திட்டத்தை செயல்படுத்த கோரியும் லாபத்தொகை அளிக்கக் கோரியும் அம்மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சூளை செயல்படாமல் மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் அம்மக்கள் மாற்று வேலையைத் தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டனர். அப்பகுதியில் செங்கல் அறுப்பதற்காக கொட்டப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் அதனால் வீணாகி வருகிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அதிகாரிகளும் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.