திருவள்ளூர்: காலி மது பாட்டில்களுடன் வந்த முதியவரால் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கீழானூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சம்பத், அரசு டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை கொடுத்து பணம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது அவரிடம் காலி பாட்டில்களை வாங்க மறுத்து, அடித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தங்களைப் போன்ற ஏழைகள் விவசாய விளைநிலங்களில் உள்ள காலி பாட்டில்களை சேகரித்து அரசு டாஸ்மாக் கடைகளில் கொடுத்து பணம் பெற்று வருவதாகவும், இதை அடியாட்களைக் கொண்டு தடுப்பதாகவும் ஆட்சியரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி