மீண்டும் அதே கடையில் கேக் கேட்டு உரிமையாளர் உமாகாந்தை மிரட்டியதாகவும், ஆனால் பணம் கொடுக்காமல் கேக் தர முடியாது என உரிமையாளர் உமாகாந்த் கூறிய நிலையில், நான்குக்கும் மேற்பட்ட நபர்களுடன் கடைக்கு வந்து கடையில் இருந்த உமாகாந்த், அவரது நண்பர், கடையில் பணிபுரிந்த பெண் ஆகியோரை கேக் கேட்டு மிரட்டியதுடன், கடையில் இருந்த கம்ப்யூட்டர், கண்ணாடி பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், கல்லாப்பெட்டியையும் அடித்து நொறுக்கினர்.
மேலும் கடையில் இருந்தவர்களை அடித்ததுடன், 'இனிவரும் காலங்களில் நான் கேட்கும்போது இலவசமாக கேக் கொடுக்கவில்லை என்றால் இந்த இடத்தில் கடை நடத்த முடியாது. உன்னை கொன்று விடுவேன்' என மிரட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கடையை அடித்து நொறுக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.