வானகரம்: போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை: இருவர் கைது

வானகரம் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனில் இருந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (21) மற்றும் சந்துரு (அஜித்) (22) ஆகியோரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் 510 உடல் வலி நிவாரண மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வாகனத்தில் சவாரி செல்வது போல் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி