திருவள்ளூர்: ரூ.10 கோடி ஏமாற்றிய பெண்; நீதிமன்ற வாசலில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் கம்பர் தெரு பகுதியில் வசித்து வந்தவர் ரேவதி இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வியாபாரிகள், குடும்பத் தலைவிகள் என அனைவரும் இவரிடம் ₹5 லட்சம் சீட்டு போட்டு பணம் கட்டியுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஏல சீட்டு நடத்தி வந்தவர் ஏல சீட்டு பணம் போட்டவர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார். 

ஏலச்சீட்டு போட்டவர்கள் பணத்தை ஏமாந்து விட்டோம். ₹10 கோடி பணம் தர வேண்டும்" என்று கூறுகின்றனர். ஏல சீட்டு நடத்திய ரேவதி அவரது மகன் க்ரிஷ் ஹைதராபாத்தில் வேலை செய்பவரிடம் சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளார். அவரது மகள் கோகிலா ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். இவரிடமும் சீட்டு பணத்தை கொடுத்து வைத்துள்ளார். 

நாங்கள் வழக்கு கொடுத்து பல மாதமாகிறது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றம் வந்த ரேவதி பிடித்துக் கொண்டு சீட்டில் ஏமாந்த பெண்கள், ஆண்கள் கேள்வி எழுப்பியதால் நீதிமன்ற வாசல் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தற்காலிகமாக ஏல சீட்டில் ஏமாற்றிய ரேவதியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்று சேர்த்த போலீசார் மருத்துவமனை வளாகத்திலும் சூழ்ந்து கொண்டு பணம் கொடுக்க வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகள் இடத்தில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ‌

தொடர்புடைய செய்தி