திருவள்ளூர்: ஷியமாளா(55) என்ற பெண் தனியாக இருந்தபோது, கணக்கெடுப்பு எடுக்க வந்ததாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த பவித்ரா(28) என்பவர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியமாளாவின் கழுத்து மற்றும் கைகளில் வெட்டிவிட்டு கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். காயமடைந்த ஷியமாளா கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பவித்ராவை கைது செய்து, காயமடைந்த ஷியமாளாவை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.