திருத்தணி: நெசவாளர்கள் உண்ணாவிரத போராட்டம்: தவெக ஆதரவு

பொதட்டூர்பேட்டையில் நெசவாளர்கள் ஆயிரம் பேர் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழக வெற்றிக்கழகம் உறுதுணையாக இருக்கும் என்று  பொதுச்செயலாளர் ஆனந்த் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெசவாளர்களின் போராட்டக் களத்திற்கு நேரில் சென்று உண்ணாவிரதக் களத்தில் ஆதரவு தெரிவித்தனர். 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்டச் செயலாளர் டில்லி அப்போது போராட்டம் நடத்திய நெசவாளர்களுக்கு நிதியுதவி வழங்கினார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், நெசவாளர்களின் இந்தப் போராட்டத்தின் தலைவர் கலாம் விஜயன் அவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நெசவாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். 

"உங்கள் போராட்டக் களத்தில் தமிழக வெற்றிக்கழகம் உறுதுணையாக இருக்கும். தலைவர் விஜய் இதுகுறித்து உங்களுக்கு, நெசவாளர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடுவார். உங்கள் போராட்டம், உங்கள் கோரிக்கைகள் வெற்றி அடையும்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி