திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் சொரக்காய்ப்பேட்டை கிராமத்தில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நெசவு மற்றும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் வீடுகளில் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்சனையை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.