சிறுவாபுரி கோயிலில் வானதி சீனிவாசன் சாமி தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று (பிப்ரவரி 18) பாஜக எம்எல்ஏ மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் புதிய கல்விக் கொள்கை திட்டம் பாஜகவின் கல்வி திட்டம் இல்லை, பல்வேறு கல்வி நிபுணர்கள் சேர்ந்து கொண்டு வந்த நல்ல திட்டம். மூன்றாவது மொழி தொடர்பாக மொழியை அரசியல் கட்சிகள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கிடைக்கும். 

அரசுப் பள்ளிகளில் மூன்று மொழிகள் மாணவர்கள் படிக்கக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பினார். திமுக பிரிவினை வாத கட்சி., நீட் தேர்வை பிராந்திய மொழிகளில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. 

மூன்றாவது மொழியாக இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட எந்த மொழியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். இது மொழி திணிப்பு அல்ல, மாணவர்களுக்கான வாய்ப்பு. இதுதான் பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் மாணவர்கள் இரண்டு மொழிகளில் தான் படிக்கிறார்களா? லட்சக்கணக்கில் பணம் செலுத்தி படிப்பவர்கள் மூன்று மொழிகளில் படிக்கிறார்கள். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என ஒத்துக் கொள்கிறாரா? அவர் பதில் தெளிவாக கூறட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி