இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பலருக்கு இதுபோன்று நாய்கள் கடித்து காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புகார் தெரிவித்தனர். மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் தொடர்ச்சியாக புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்ளாமல் ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வராததால் தற்போது இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் நான்கு லட்சம் வரை செலவாகும் என்று கூறியதால் குழந்தைக்கு மேல் சிகிச்சை செய்ய கூலி தொழிலாளி பழனி இடம் போதிய பணம் இல்லாததால் பொதுமக்களிடம் கையேந்தி நிற்கிறார்.
அரசும் இவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதேபோல் ஆர்.கே. பேட்டை பஜார் பகுதியில் அரசு பள்ளிகளில் சந்திரமௌலி என்ற சிறுவனை நாய் கடித்ததில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.