திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழ் புத்தாண்டு தினமான வரும் 12 மற்றும் 14 ஆம் தேதிகளில் 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது. இதனால், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு நாட்களும், பேருந்து, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும், இடவசதிக்கு ஏற்ப மலைக்கோவிலில் செல்ல அனுமதிக்கப்படும் என கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.