சென்னையிலிருந்து ரேணிகுண்டா நோக்கிச் சென்ற 64 பெட்டிகள் கொண்ட நிலக்கரி சரக்கு ரயில், நள்ளிரவு 2 மணியளவில் திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரயில் நிலையத்தைக் கடக்கும்போது, ஒரு பெட்டியில் இருந்து புகை வெளிவந்தது. இதை அறிந்த நிலைய மேலாளர் உடனடியாக ரயில் ஓட்டுநருக்குத் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தினார். திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து புகை வந்த பெட்டியில் நீரைப் பாய்ச்சி சூட்டைத் தணித்தனர். இதனால், அரை மணி நேரத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.