திருவள்ளூர்: பெங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 இல்லையா?

பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 பரிசுத்தொகைக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத்தொகை குறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் ரொக்கப் பரிசுத்தொகை குறித்தான அறிவிப்பு இடம்பெறவில்லை. ஆகையால், பொங்கலுக்கு இந்தமுறை ரொக்கப்பரிசு உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி