திருவள்ளூர் மேற்கு மாவட்டம் இரா. கி. பேட்டை வடக்கு ஒன்றியம் பைவலாசா ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையின் காரணமாக ஆழ்துளை கிணறு வேண்டி பொதுமக்கள் ஒன்றுகூடி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்க ஏற்பாடு செய்தார். உடன் இரா. கி. பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் C. N. சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.