திருத்தணி நகராட்சியில் காய்கறி கடைகள் மற்றும் பூ மார்க்கெட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர் போன்ற பொருள்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு ஜூலை 31 நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், நகராட்சி ஊழியர்கள் சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 70 கிலோ மதிப்புடைய பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர்.