திருத்தணி: 60 திருமணங்கள்... 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மலைக்கோயில் அடிவாரத்தில் 20 மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. திருமண மண்டபங்களில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்தை சீர்செய்ய போதிய போலீசாரும் இல்லாததால் இதனால் மலைக்கோவில் அடிவாரம், அரக்கோணம் சாலை, ரயில் நிலையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதேபோல் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மலைக்கோயில் மீது ஆர்.சி. மண்டபம் மற்றும் காவடி மண்டபத்தில் 35 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் திருமணத்திற்கு வந்த திருமண வீட்டார் அதிகளவு மலைக்கோவிலுக்கு திரண்டதால் தங்கள் சொந்த வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருக்கோயில் காவடி மண்டபத்தில் மற்றும் திருக்கோயில் மாட வீதியில் திருமணம் நடைபெற்றது. 

வரும் காலங்களில் வியாபார ரீதியாக அதிக திருமண மண்டபங்கள் ஏற்படுத்தியுள்ள கோயில் நிர்வாகத்தின் பகுதியில் திருமணங்கள் நடைபெற வேண்டும். கோயில் வளாகப் பகுதியில் காவடி மண்டபத்தில் திருமணங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும். இதுபோல் அதிக திருமணம் நடைபெறும் நாட்களில் முன்னேற்பாடுகள், பணிகளில் போதிய பார்க்கிங் வசதி, போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி