திருத்தணி கோட்டத்தில் உள்ள 44 தனியார் மெட்ரிக் பள்ளிகளின் 275 வாகனங்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வாகன ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 170 வாகனங்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்தன. ஆனால் 32 வாகனங்களில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டதால், அவற்றை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளார்.