திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், கடந்த 7 ஆண்டுகளாக பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் 1055 கிலோ வெள்ளிப் பொருட்கள், தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவின் பேரில் இன்று முதல் உருக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜு கண்காணிப்பில், மலைக்கோயில் வளாகத்தில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் 5 நாட்களுக்கு இந்த உருக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொண்டுள்ளது.