இந்நிகழ்ச்சியில் பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவர் வடாரண்யேஸ்வர சுவாமி சிங்க வாகனம், சூரிய பிரபை வாகனம், சந்திரப் பிரபை வாகனம், அன்ன வாகனம், நாக வாகனம், புலி வாகனம், யானை வாகனம் போன்ற வாகன சேவைகளில் சுவாமி தினந்தோறும் ஒவ்வொரு வாகன சேவைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மேலும் இந்த பங்குனி மாத உற்சவத்தில் சிறப்பு நிகழ்வான ஏழாம் நாள் கமலத் திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் எட்டாம் நாள் வண்டார் குழலி உடனுறை தாயாருக்கும் வடாரண்யேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. மேலும் 14 நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு ரிஷப வாகனம் விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி