இந்த நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் கோவிலுக்கு வந்து தர்ப்பணம் செலுத்தும் போழுது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள், தர்ப்பண பொருட்கள் இவைகளை ஈருதய நாசினி குளத்தில் போட்டு விடுவதால் குளம் சீரழிந்து வருகிறது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் கடந்த அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்பட்ட இத்திருக்குளம் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரப்பி வரும் அவல நிலை காணப்படுகிறது.
இதனை கோவில் நிர்வாகமும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகமும் உரிய முறையில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் குளத்தைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் இவ்வழியாகச் செல்லும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் நோய் பரப்பி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.