கரும்புடன்னுக்கு ரூ. 4000 வழங்ககரும்புவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்தணியில் கரும்பு விவசாயிகள், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் விலை நிர்ணயிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ. 162 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி