திருவள்ளூர் மாவட்டம், இரா. கி. பேட்டை ஒன்றியம், வங்கனூர் கிராமத்தில் உள்ள சிங்கசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தினமும் வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.