கவரைப்பேட்டை பஜார் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பஜார் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் கால்வாய் உடைந்து சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி