திருவள்ளூர்: பராமரிப்பின்றி காட்சியளிக்கும் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கொப்பூர் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது. கட்டிடத்தைச் சுற்றி செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. மேலும், இது விறகு கிடங்காகவும் மாறியுள்ளது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே, கட்டிடத்தைச் சுற்றியுள்ள முட்செடிகளைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் சுய உதவி குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி