அப்போது அங்கு சுற்றிக் கொண்டிருந்த தெரு நாய் மாணவி ஸ்ரீநித்யாவை இரண்டு காலிலும் கடித்துள்ளது. இதனையடுத்து பள்ளி மாணவியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவி ஸ்ரீநித்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தாமல் இருப்பதால் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது