திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பார்வதி சமேத சங்கமேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு இன்று அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவலிங்க வடிவில் அண்ணம், காய்கறிகள், பழங்கள் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானை தரிசனம் செய்தனர். மேலும், சிவபெருமானின் வாகனமான பைரவருக்கு ருத்ராட்சை, வடமாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொசஸ்தலை ஆற்றில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அன்னாபிஷேகம் செய்யப்பட்ட உணவு ஆற்றில் கரைக்கப்பட்டது.