திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் கடந்த 27 நாட்களில் ₹1 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 116 ரூபாய் ரொக்கமாகவும், 713 கிராம் தங்கமாகவும், 8 கிலோ 459 கிராம் வெள்ளியாகவும் உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்த உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதியுடன் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் நடைபெற்றது.