சென்னையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மாலை வேளையில் சென்னை அதன் புறநகர் பகுதிகளில் மழை கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று மாலை சென்னை புறநகர் பகுதியான போரூர், வளசரவாக்கம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லக்கூடிய மாணவர்கள், மாணவிகள் மழையில் நனைந்து செல்லக்கூடிய காட்சி நம்மால் காணமுடிகிறது. அதேபோல் அலுவலகம் மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குறிப்பாக பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லக்கூடிய பொதுமக்கள் கனமழையில் நனைந்தபடி செல்லக்கூடிய காட்சி நம்மால் காணப்படுகிறது.
மேலும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழையும் இந்த பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது. போரூர் அதனை சுற்றியுள்ள சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தேங்கி காட்சியளித்து வருகிறது. இந்த மழை காரணமாக இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.