திருவள்ளூர்: மூதாட்டியை கடித்த வெறி நாய்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுப்பிரமணிய நகர் கம்பர் தெருவில் வசிப்பவர் சேகர். இவரது தாய் பச்சையம்மாள் (வயது 90). இவர் அருகில் வீட்டில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தனித்தனியாக வீடுகளில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் வீட்டின் வெளியில் அமர்ந்திருந்த பச்சையம்மாளை திடீரென்று அந்த பகுதி வழியாக வந்த வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. உடலில் 30 இடங்களுக்கும் மேல் கை, கால்கள், முகம், மூக்கு போன்ற இடங்களில் கடித்து படுகாயம் அடைந்துள்ளார். நாய் கடிப்பதை கண்ட அவரது மகன் சேகர் ஓடி வந்து அந்த வெறிநாயை துரத்த முயற்சி செய்துள்ளார். அப்போழுது அந்த வெறிநாய் சேகர் கால் பகுதியில் கடித்துவிட்டது. உடனடியாக அருகில் கட்டட பணியில் மேற்கொண்டிருந்த ஆண்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து அந்த தெரு நாயை அந்த பகுதியில் இருந்து துரத்திவிட்டனர். 

படுகாயம் அடைந்த பச்சையம்மாள் மற்றும் சேகர் ஆகிய இருவரையும் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போழுது தெரு நாய் வெறிநாய் கடித்து திருத்தணி அரசு மருத்துவமனையில் தாய்/மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி