திருவள்ளூர்: மெழுகு வர்த்தி கைகளில் ஏந்தி நூதன முறையில் மக்கள் போராட்டம்

திருவள்ளூர் அருகே மின்வாரிய அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி கைகளில் ஏந்தி மின்வாரியத்தை கண்டித்து நூதன முறையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காததால் அல்லல்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு தூக்கத்தை தொலைத்த பொதுமக்கள் இன்று மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து மணவாள் நகர் மேம்பாலம் அருகே உள்ள மின்வாரிய அலுவலர் நுழைவாயில் முன்பு பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி