ஆனால் பேருந்து முழுவதும் டயர்கள் அடுக்கி வைத்திருந்ததால் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அரசு பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க கூடிய வகையில் இருந்த பேருந்தில் பேருந்தின் உதிரி பாகங்களை ஏற்றிச் சென்றது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது.
இதனை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் டயர்களை ஏற்றிச் செல்ல அதற்கான வாகனத்தில் செல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தில் ஏற்றிச் சென்றது அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.