பொன்னேரி அருகே கர்ப்பிணி புவனேஸ்வரி, கும்மிடிப்பூண்டியில் உள்ள சுமதி கிளினிக்கில் எட்டு மாதங்கள் சிகிச்சை பெற்றார். பல லட்சம் செலவழித்தும், மாற்றுதிறனாளியாக குழந்தை பிறந்ததால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி தரப்பினர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அம்பிகாவிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, சுமதி கிளினிக்கில் ஆய்வு செய்த இணை இயக்குனர், விதிமுறைகளை மீறி செயல்பட்ட விஜயா மெடிக்கல்ஸ் மருந்தகத்தை மூடி சீல் வைத்தார்.