திருத்தணி: செவிலியரை மிரட்டி காவலர் மீது தாக்குதல்

திருத்தணி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், சிகிச்சைக்காக வந்த அண்ணாமலைக்கு செவிலியர் சுகன்யா சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலையுடன் வந்த அஜித், செவிலியரை தாக்கி, அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். சுகாதார நிலைய காவலர் கோவிந்தராஜையும் அஜித் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செவிலியரின் செல்போனில் இருந்த வீடியோவை போலீசார் அழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி