திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர், கடந்த மாதம் 20ம் தேதி ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்றபோது, இனிப்பு வாங்க சென்ற கணவர் திரும்பி வந்தபோது மனைவி மாயமாகியுள்ளார். இதுகுறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.