திருவள்ளூர்: புலம்பெயர் தொழிலாளி கொலை.. 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே, அசாமைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் மதுபோதையில் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டுள்ளார். வீட்டில் தனியே இருந்த பெண் பயந்து தண்ணீர் கொடுக்க மறுத்ததால், அவர் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பெண் தனது தந்தைக்கு தகவல் தெரிவிக்க, அவர் சுமார் 20 பேருடன் வந்து அந்த தொழிலாளியை கடுமையாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக ரவி (59), சிவா (47), ஜெயக்குமார் (35) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி