திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நாககுப்பம் கிராமத்தில் ரூ. 6.02 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி புனரமைப்பு பணியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மா. இரகுராஜ், கிராமப் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பா. சம்பத், கிராமப் பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமதி. திலகவதி ரமேஷ், ஒன்றிய துணை பெருந்தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.