விஜய் அரை சதம் அடித்துள்ளார்.. அமைச்சர் நாசர் பேட்டி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொது நூலகத் துறை சார்பில் 5-வது புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் 1 கோடியே 31 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சேலத்தில் விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்துக் கேட்டபோது, விஜய் அரை சதம் அடித்துள்ளார் என கிண்டலாக கூறிச் சென்றார்.

தொடர்புடைய செய்தி