திருவள்ளூர் ஆட்சியரகத்தில் 5 புதிய வழித்தடங்களுக்கு திருத்தணி இஸ்லாம் நகர் முதல் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி ரவுண்டானா வரை ஒரு மினி பேருந்தும், செங்குன்றம் பேருந்து நிலையம் முதல் புழல் கேம்ப் வரை ஒரு மினி பேருந்தும், பட்டாபிராம் முதல் காரணி வரை ஒரு பேருந்து, ஆவடி மார்க்கெட் கன்னட பாளையம் வரை, திருநின்றவூர் துவங்கி செங்குன்றம் பேருந்து நிலையம் வரை என ஐந்து சிற்றுந்துகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மை துறை அமைச்சர் நாசர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஐந்து பழைய சிற்றுந்துகளை சீரமைத்து அதனை புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகளாக இன்று மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்த நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட மினி பேருந்து மரக்கிளையில் பட்டு பேருந்து மேற்கூரையில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.