திருவொற்றியூரில் 272 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சூரை மீன்பிடித் துறைமுகத்தை, தமிழக வெற்றிக் கழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் நிதியமைச்சர் மரியவில்சன் ஆகியோர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். சில மாதங்களுக்கு முன் அப்போதைய முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தின் தற்போதைய நிலையை அவர்கள் நேரில் கண்டறிந்தனர். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.