இந்தப் பள்ளியில் திடீரென்று மூன்று கார்களில் வந்து இறங்கிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த பள்ளியில் உள்ள 94 வருடம் பழமையான கட்டடத்தை வெளிப்புறத்தில் 10 நிமிடத்தில் ஆய்வு செய்து இந்த கட்டிடத்தை புதுப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கட்டடம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் மூன்று வருடமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பள்ளியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது முழு உருவ வசதிக்கு அந்தப் பள்ளியில் காலாண்டு விடுமுறை பேப்பர் திருத்தும் பணியில் இருந்த மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர்களை அந்த பள்ளியில் அலுவலகத்தில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் 15 நிமிடத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் காரில் ஏறி பறந்து போனார்.