திருவள்ளூர்: பிரேக் பிடிக்காத ஆட்டோ; விபத்தில் சிக்கிய திருமண தம்பதிகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் கலைஞர் நகர் பகுதியில் வசிப்பவர் சந்தியா மற்றும் பாலாஜி ஆகியோர்களுக்கு இன்று திருத்தணி முருகன் கோயில் மலை மீது திருமணம் நடைபெற்றது. இதன் பின்பு மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர்கள் மணமகன் தாயாருடன் முத்து என்பவர் ஆட்டோவில் மலை மீது இருந்து வாடகைக்கு ஆட்டோவை எடுத்துக்கொண்டு மலை அடிவாரம் வரும்போது திடீரென்று ஆட்டோவில் பிரேக் பிடிக்காமல் போனதால் மலை அடிவாரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதி ஆட்டோ நின்றது.

இதனால் ஆட்டோவில் வந்த இன்று திருமணம் நடந்த மணமகள் மற்றும் மணமகன் ஆகியோர்கள் படுகாயம் அடைந்தனர். மொத்தம் நான்கு பேர் படுகாயம் அடைந்த இவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இவர்கள் அனைவரும்  உயிர் தப்பி உள்ளனர்.

சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோயில் நிர்வாகத்தினர் மலைக்கோவிலில் இருந்து வரும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு மற்றும் வாகனங்கள் சோதனை போன்றவை ஏற்படுத்தாததால் இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன என்பது முருகப் பக்தர்களின் ஆதங்க கருத்தாகும்.

தொடர்புடைய செய்தி